விளம்பரத்துக்காக ஆய்வு செய்தீர்களா : தேதியை பற்றி கேள்வி கேட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு ஓபிஎஸ் பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 November 2021, 8:47 pm
OPS Duraimurugan - Updatenews360
Quick Share

சென்னை : முல்லை பெரியாறு அணை குறித்து துரைமுருகன் கேட்ட கேள்விக்கு ஓபிஎஸ் அறிக்கையில் பதிலளித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் படகில் சென்று ஆய்வு செய்தனர். அணை நீர்மட்டத்தை 142 அடிவரை தேக்காமல் கேரளாவுக்கு நீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

ஆய்வு குறித்து அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ், தான் முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்ததில்லை, பார்வையிடவில்லை என்று மாண்புமிகு அமைச்சர் துரைமுருகளின் கூற்று முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அதிமுக ஆட்சியில் தான் 14 முறை நான் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று தண்ணீரை பாசனத்திற்காக திறந்துவிட்டு ஆய்வு செய்திருக்கிறேன் என தெரிவித்தார்.

இந்த 14 தடவை முல்லைப் பெரியார் அணைக்கு சென்றேன் என்கிறாரே எதிர்க்கட்சித் துணைத் தலைவர். அது எந்தெந்த தேதிகளில் என்று குறிப்பிடுவாரா? நான் தேதி எல்லாம் குறித்து வைக்கவில்லை என்று திரு.ஓ.பி.எஸ் சொல்லலாம். தேதிகளை இவர் குறித்து வைக்காவிட்டாலும் பொதுப்பணி இலாக்காவில் குறித்து வைத்திருப்பார்கள் என கூறினார்.

இதற்கு பதிலளித்த ஓபிஎஸ், விளம்பரத்திற்காக ஆய்வு செய்ய செல்வோர்கள்தான் தேதியை குறித்து வைப்பார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார். நீண்ட நெடிய அறிக்கையை வெளியிட்டுள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்கள், கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து ஒரு வார்த்தை கூட வாய் திறக்காதது வேதனை அளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 472

0

0