தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்: கல்லூரி மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
11 January 2022, 9:07 am
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுவதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அனைத்து பிஇ, கலை-அறிவியல் , பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மருத்துவக்கல்லூரி, கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மேலும், பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை கிடையாது எனவும் அந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித்தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 248

0

0