குறையும் கொரோனா பாதிப்பு: நீதிமன்றங்களில் நேரடி விசாரணை…கட்டுப்பாடுகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!!

Author: Rajesh
8 February 2022, 1:32 pm
Cbe Spl Court -Updatenews360
Quick Share

கோவை: கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் கோவையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், மீண்டும் நேற்று முதல் நேரடி விசாரணை துவங்கியது.

கொரோனா மூன்றாவது அலை பாதிப்பு காரணமாக, ஜன., 3 முதல், நீதிமன்றங்களில் நேரடி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்தால், அனைத்து துறையிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் நீதிமன்றங்களில், நேரடி விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களில், நேற்று நேரடி விசாரணை நடத்தப்பட்டது. வக்கீல்கள் நேரடியாக கோர்ட்டில் ஆஜராகி வாதாடினர். ஜாமின் மற்றும் முன்ஜாமின்மனுக்கள் நேரடியாக தாக்கல் செய்யப்பட்டன.

கொரோனா பாதுகாப்பு முறைகளை பின்பற்றி, தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிதல், கை கழுவுதல் ஆகிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. வக்கீல் சங்கம் மற்றும் சேம்பர் திறக்கப்பட்டு வக்கீல்கள் அனுமதிக்கப்பட்டனர். கூட்டம் கூடுவதை தவிர்க்க, கோர்ட் வளாக கேன்டீன் மூடப்பட்டது.

Views: - 418

0

0