இயக்குநர் மணிகண்டனின் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதை மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளையர்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். தலைமைக் காவலரான தந்தையின் பணி நிமித்தம் காரணமாக பல ஊர்களுக்கு இடம்பெயரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தனது பள்ளிப் படிப்பை முடித்தபின், வாகன பொறியியலில் பட்டயப் படிப்பை மேற்கொண்டார். தொடக்கத்தில், திருமண ஒளிப்படக் கலைஞராக அவர் பணியாற்றினார்.
பின்னர் இயக்குனர் எம். மணிகண்டன் ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் மற்றும் இயக்குனர் ஆக பணியாற்றி உள்ளார். இவர் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் முதலில் விண்ட் (2010) என்ற குறுப்படத்தை இயக்கினார். இவர் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படமானது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இது 2015 இல் சிறந்த குழந்தைகள் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.
அதன் பிறகு குற்றமே தண்டனை ஆண்டவன் கட்டளை கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். கடைசி விவசாயி படத்திற்காக இயக்குனர் மணிகண்டனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மணிகண்டன் அவரது படத்தின் பணிகளுக்காக சென்னையில் குடும்பத்துடன் இருக்கும் நிலையில், அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி எழில் நகரில் இருக்கும் வீடு பூட்டி இருந்திருக்கிறது. அந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து 5 சவரன் நகைகள், ஒரு லட்சம் பணம் மற்றும் தேசிய விருதையும் திருடிச் சென்றனர். போலீசில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் மணிகண்டனின் வீட்டில் திருடப்பட்ட தேசிய விருதை மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளையர்கள் திருப்பிக் கொடுத்துள்ளனர். ‘கடைசி விவசாயி’ படத்திற்காக இயக்குநர் மணிகண்டனுக்கு கிடைத்த தேசிய விருது பதக்கத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள், ‘அய்யா எங்களை மன்னித்து விடுங்கள்.. உங்கள் உழைப்பு உங்களுக்கு’ என்ற வாசகத்துடன் அடங்கிய மன்னிப்பு கடிதத்துடன் கொள்ளையடித்த பதக்கத்தை அவரது வீட்டு வாசலில் கேரி பேக்கில் தொங்கவிட்டுச் சென்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.