அவரை பலமுறை விமர்சித்திருக்கிறேன்.. ஆனால், ஒரே வருடத்தில் நிரூபித்துக் காட்டியவர் எடப்பாடி பழனிசாமி : நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏசி புகழாரம்…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
5 November 2022, 9:45 am
Quick Share

சென்னை : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக பதவி வகித்த போது ஒரே வருடத்தில் தன்னை நிரூபித்துக் காட்டியதாக இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழா சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தொண்டு நிறுவனத்தை முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்ற போது நானே அவரை விமர்சித்துள்ளேன். இவ்வளவு பெரிய பொறுப்பை இவர் எப்படி செய்வார் என சந்தேகப்பட்டேன். ஆனால், அரசியல் வரலாற்றில் ஒரு சாமானியன், விவசாய குடும்பத்தில் பிறந்தவர் முதல்முறையாக இந்த பதவியில் அமர்ந்ததை பாராட்ட வேண்டும்.தான் ஒரு சிறந்த நிர்வாகி என ஒரே வருடத்தில் நிரூபித்து காட்டினார், என்று புகழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அரசியலில் முத்திரை பதிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது, அது எனக்கு கிடைத்துள்ளது. திரைப்படத்தில் எளிதாக ஜொலித்து விடலாம். அரசியலில் ஜொலிப்பது கடினம். அரசியல் முட்கள் நிறைந்த பாதை. தெருவில் நின்று, ஒவ்வொரு படியாக ஏறித்தான் இந்த இடத்திற்கு வர முடியும்”, என்று தெரிவித்தார்.

Views: - 174

0

0