டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 % தீபாவளி போனஸ் : தமிழக அரசு அறிவிப்பு

5 November 2020, 7:51 pm
TN Secretariat - Updatenews360
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை அரசு ஊழியர்கள் கொண்டாடும் விதமாக தமிழக அரசின் சார்பில் ஊக்கத் தொகையும், போனஸும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், கொரோனா காலத்திலும் அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியத்தை வழங்கி வரும் தமிழக அரசு, பொதுத்துறை ஊழியர்களுக்கு அண்மையில் 10% போனஸை அறிவித்தது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 சதவீதம் போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Views: - 27

0

0

1 thought on “டாஸ்மாக் பணியாளர்களுக்கு 10 % தீபாவளி போனஸ் : தமிழக அரசு அறிவிப்பு

Comments are closed.