‘தீபாவளிய மகிழ்ச்சியா கொண்டாடுங்க’ : மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை..!!

12 November 2020, 1:05 pm
school education - updatenews360
Quick Share

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்று முதல் 4 நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, வரும் 16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறக்கப்பட இருந்த பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இதனால், சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளிப் பண்டிகையை கொண்டாட திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0