சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து மீண்டும் டிஸ்சார்ஜ் ஆனார் விஜயகாந்த்!!

By: Babu
9 October 2020, 1:28 pm
Vijayakanth- updatenews360
Quick Share

2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கமான சோதனைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

இதையடுத்து, 2வது கட்ட மருத்துவ பரிசோதனைக்காக விஜயகாந்த் கடந்த 6ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்பி விடுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 2வது கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகள் முடிந்த நிலையில், நல்ல உடல்நலம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Views: - 41

0

0