விரைவில் விஜயகாந்த் டிஸ்சார்ஜ்..! கொரோனா அறிகுறி இல்லை : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!!

29 September 2020, 10:52 am
Vijayakanth- updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தொற்று அறிகுறி இல்லாததால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினருக்கு தொற்று ஏதும் தென்படாத நிலையில், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனையிலேயே அவரும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்‌ செப்டம்பர்‌ 28ம்‌ தேதி கோவிட்‌ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்தொற்று உறுதியாகி சென்னை, மியாட்‌ மருத்துவமனையில்‌ செப்டம்பர்‌ 29ம்‌ தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்‌.

அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர் குழுவின்‌ கண்காணிப்பில்‌ உள்ளார்‌. பிரேமலதா விஜயகாந்தின்‌ முதல்நிலை பரிசோதனைக்குப்‌ பின்‌ தேமுதிக நிறுவனத் தலைவர்‌ மற்றும்‌ கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்த்‌ டிஸ்சார்ஜ்‌ செய்யப்படுவார்‌. அவரின்‌ உடல்நிலை சீராக உள்ளது. நோய்தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர்‌ மருத்துவச்‌ சேவைகளினால்‌ அவர்‌ நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார்‌,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 3

0

0