விவசாயிகள் பாதுகாக்கப்பட்டால்தான் நாடு காக்கப்படும் : கிசான் சம்மான் திட்ட முறைகேடு குறித்து விஜயகாந்த் கருத்து..!

8 September 2020, 5:19 pm
Vijayakanth- updatenews360
Quick Share

விவசாயிகளுக்கான கிஷான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பிரதான்‌ மந்திரி கிசான்‌ சம்மான்‌ நிதி திட்டம்‌ கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 3 தவணைகளாக விவசாயிகளின்‌ வங்கி கணக்கில்‌ நேரடியாக வேளாண்‌ துறை மூலம்‌ இந்த நிதி செலுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்‌ இணைய நிலத்துக்கான கணினி பட்டா அல்லது சிட்டா,
வங்கி கணக்கு புத்தக நகல்‌, ஆதார்‌ அட்டை நகல்‌ ஆகியவற்றை இணைக்க வேண்டும்‌.

இந்த திட்டத்தில்‌ விவசாயிகள்‌ அல்லாத பல ஆயிரம்‌ பேர்‌ போலி ஆவணங்கள்‌ மூலம்‌ நிதி உதவி பெற்று மோசடி செய்து இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடலூர்‌, கள்ளக்குறிச்சி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில்‌ அதிக அளவில்‌
மோசடி நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில்‌ மட்டும்‌ 16 ஆயிரம்‌ பேர்‌ போலி கணக்குகள்‌ இருந்தது தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்‌ ஆயிரத்து 800-க்கும்‌ மேற்பட்ட வங்கிகள்‌ கணக்குகளும்‌, சேலம்‌ மாவட்டத்தில்‌ 10 ஆயிரத்து 700 பேர்‌ மோசடியாக இணைந்துள்ளதும்‌ தெரிய வந்துள்ளது.

திருவாருர்‌ மாவட்டத்தில்‌ வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 600 பேர்‌ பதிவு செய்துள்ளனர்‌. இதேபோல்‌, நீலகிரியில்‌ பிரதமர்‌ நிதி உதவி திட்டத்தில்‌ விவசாயிகள்‌ அல்லாத 44 பேர்‌ பயன்பெற்று வருவது தெரிய வந்ததை அடுத்து, அந்த கணக்குகள்‌ முடக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே நமது நாடு காக்கப்படும். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்களிடம் பணத்தை பறிமுதல் செய்வதுடன் மேலும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், என தெரிவித்துள்ளார்.

Views: - 7

0

0