மதுக்கடைகளை குறைக்கும் விவகாரம்.. திமுக அந்தர் பல்டி… மக்கள் பதிலடி கொடுப்பார்கள் : பிரேமலதா விஜயகாந்த் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 2:52 pm
Quick Share

தூத்துக்குடி : மதுபான கடை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- திமுக வந்தாலே மின்வெட்டு ஏற்படும் என்ற நிலை ஏற்படும் என்பதை நாம் ஒத்துகொள்ள வேண்டும். அதனை நிருபிக்கும் வகையில் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றது. மின்வெட்டு பிரச்சினை-யினை சவாலாக எடுத்துகொண்டு மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு செய்ய இருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் திமுக ஆட்சியில் பெரிதாக எதையும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் திமுகவினர் அள்ளி வீசிய தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி வருகின்றனர்.

எனவே திமுக ஓராண்டு ஆட்சி என்பது மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கவில்லை என்பதுதான் உண்மை. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மின்மிகை மாநிலமாக தமிழகமாக இருந்தது உண்மை, எனக் கூறினார்.

டாஸ்மாக் மதுபான கடை விவகாரத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலை, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலையை திமுக எடுத்து வருவது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதை மக்கள் உணர்ந்து கொண்டு ஒரு விரல் புரட்சி மூலம் மாற்றத்தை தர வேண்டும் என்றார்.

Views: - 534

0

0