அமமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் : ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என அறிவிப்பு

By: Babu
15 September 2021, 12:08 pm
Quick Share

சென்னை : வரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில்‌ நடைபெற இருக்கும்‌ 2021 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில்‌ தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌ தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும்‌, கழகத்‌ தொண்டர்களும்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாட்கள்‌ காலை 10.00 மணியில்‌ இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில்‌ விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌.

ஊரக உள்ளாட்சி தேர்தலில்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின்‌ நிர்வாகிகளாக இருப்பவர்களும்‌ கழகத்தின்‌ அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும்‌ தகுதியானவர்கள்‌.
கட்டணத்‌ தொகை:
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்‌ – 4,000/-
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்‌ – 2,000/, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக அமமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 119

0

0

Leave a Reply