அதிமுக ஒதுக்கும் தொகுதிகள் ‘ஓகே’வா…!! நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் தேமுதிக..!!!

8 March 2021, 1:42 pm
Vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்கிறது.

அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக தீவிர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. வன்னியர் உள்ஒதுக்கீட்டை காரணமாக வைத்து பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, முதலில் சுமூகமாக உடன்பாட்டை முடித்தது. இதைத் தொடர்ந்து, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தொகுதி பங்கீட்டில் கறார் காட்டி வந்தது.

இதனிடையே, 20 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கான இடத்தையும் கொடுத்து பாஜகவை அதிமுக சரிகட்டியது. ஆனால், தேமுதிக தொடர்ந்து அடம்பிடித்து வருகிறது.

மொத்தம் 25 தொகுதிகளை தேமுதிக கேட்பதாகவும், ஆனால் அதிமுக இதனை ஏற்க மறுப்பு தெரிவித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே, 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களை இடத்தையும் கொடுக்க அதிமுக முன்வந்துள்ளது. ஆனால், கூடுதல் தொகுதிகளை தேமுதிக வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலில் 41 தொகுதிகள் கேட்ட தேமுதிக 23 தொகுதிகள் வரை இறங்கி வந்தது. அதேவேளையில், 15 இடங்கள் தருவதாகக் கூறிய அதிமுக, 17 தொகுதிகளும், ஒரு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்க முன்வந்துள்ளது.

இதனை தேமுதிகவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிமுக – தேமுதிக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை விரைவில் ஒப்பந்தமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்‌, நடைபெற்றவுள்ள 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி மாவட்ட கழக செயலாளர்கள்‌ அவசர ஆலோனை கூட்டம்‌ நாளை 09.03.2021 செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணியளவில்‌ சென்னை கோயம்பேட்டில்‌ உள்ள தலைமை கழகத்தில்‌ நடைபெறவுள்ளது. மாவட்ட கழக செயலாளர்‌ அனைவரும்‌ ஆலோசனை கூட்டத்தில்‌ தவறாமல்‌ கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

Views: - 50

0

0