தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர வீழ்ச்சியல்ல… மீண்டும் தேமுதிக எழுச்சி பெறும் : விஜயகாந்த் அறிக்கை… தொண்டர்கள் நம்பிக்கை

Author: Babu Lakshmanan
13 September 2021, 7:51 pm
vijayakanth - updatenews360
Quick Share

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் வெற்றி தேமுதிக தனது பலத்தை நிச்சயம் நிரூபிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.,6 மற்றும் 9ம் தேதிகள் என இருகட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மேலும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய செப்டம்பர் 22ம் தேதி கடைசி நாளாகும். செப்.,23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. செப்.,25ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம். பதிவாகும் வாக்குகள் அக்.,12ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் பொறுப்பாளர்கள் நியமனம், தேர்தல் வாக்குறுதிகள் என அடுத்தடுத்து தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டன.

இந்த நிலையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மோசமான தோல்வியை தேமுதிக சந்தித்துள்ள நிலையில், தொண்டர்களுக்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதமாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தேமுதிக துவங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து நாளை (14.09.2021) 17ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர அது வீழ்ச்சி அல்ல. எனவே, வருகிற உள்ளாட்சி தேர்தலி்ல்,அடுத்தடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் தேமுதிக பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 139

0

0