#திமுக_வேணாம்_போடா : டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டெக்…! ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

7 September 2020, 11:21 am
dmk hastag - updatenews360
Quick Share

சென்னை : புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க.வுக்கு எதிராக டுவிட்டரில் புதிய ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

ஒரு கட்சியோ, அமைப்போ அல்லது தனி மனிதனின் சொந்த பிரச்சனை முதற்கொண்டு, பொது பிரச்சனை வரைக்கும் விவாதிக்கும் ஒரு பொது மேடையாக சமூக வலைதளங்கள் விளங்கி வருகின்றன. இதனையே தற்போதைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பெரிதும் நம்பி இருக்கின்றன. ஒரு செயலை பாராட்டுவதென்றாலோ, விமர்சிப்பதென்றாலோ, அதனை டுவிட்டரில் டிரெண்ட் செய்வதை நெட்டிசன்கள் வாடிக்கையாகி வைத்துள்ளனர்.

அண்மையில், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ‘இந்தி தெரியாது போடா’ என்னும் ஹேஷ்டேக்கை தி.மு.க. உள்பட திராவிட அமைப்புகள் டுவிட்டரில் டிரெண்டாக்கினர். இது பா.ஜ.க., உள்ளிட்ட அதன் ஆதரவு கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ‘திமுகவேணாம்போடா’ என்னும் ஹேஸ்டேக்கை பா.ஜ.க.வினர் இன்று டுவிட்டரில் டிரெண்டு செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை வறுத்தெறுத்து கருத்து பதவிடுவதுடன், ‘திமுகவேணாம் போடா’ என்னும் ஹேஸ்டேக்கையும் போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், இந்தியை எதிர்க்கும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஆங்கிலமாவது தெரியுமா..? டெவலப்மெண்ட்…டெவலப்மெண்ட்….டெவலப்மெண்ட்… ஒன்லி டெவலப்மெண்ட் எனக் கூறி கிண்டலடித்து மீம்களையும் தெறிக்க விட்டு வருகின்றன்.

மேலும், இந்தி படிப்பதினால் தமிழ் அழியாது என்றும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க.விற்கு நெட்டிசன்கள் பதிலளித்து வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே, தி.மு.க.விற்கு ஆதரவாக, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக குஷ்பு, இந்தியில் பேசிய வீடியோவையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 0

0

0