திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்… மதிமுக, விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டி : வெளியானது பட்டியல்..?

1 March 2021, 3:55 pm
dmk_alliance - updatenews360
Quick Share

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு மற்றும் சின்னம் தொடர்பான தகவல் இடம்பெற்றுள்ள பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் வரும் ஏப்., 6ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக கட்சிகள் தங்களின் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன. அதிமுக தரப்பில் பாமக, பாஜகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நிறைவு செய்து விட்டது. ஆனால், திமுக தரப்பில் எந்த கட்சியுடனும் இன்னும் தொகுதி பங்கீடு உறுதியாகவில்லை.

ஆனால், கூட்டணி கட்சிகளை அழைத்து திமுக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதி ஒதுக்கீடு பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் திமுக 170 இடங்களில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக 7, விசிக 7, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3, மனித நேய மக்கள் கட்சி, மஜக, எஸ்டிபிஐ, கொமதேக, தவாக மற்றும் இதர கட்சிகள் தலா 2 இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள் அனைத்தும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், இ.கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தேசப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 4

6

1