விசிகவிற்கு 6 தொகுதிகளை ஒதுக்கியது திமுக : உடன்பாடு ஒப்பந்தத்தில் ஸ்டாலின் – திருமாவளவன் கையெழுத்து

4 March 2021, 2:01 pm
DMK - vck - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே திட்டமிட்டபடி குறைந்த தொகுதிகளை வழங்கப்படும் என்ற ஸ்டாலினின் முடிவுக்கு கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

அந்த வகையில், திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் 7 தொகுதிகள் கேட்கப்பட்டது. இதனால், இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வந்தது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கையெழுத்தான ஒப்பந்தத்தில், “நடைபெற உள்ள சட்டமன்றப்‌ பொதுத்‌ தேர்தலில்‌, திராவிட முன்னேற்றக்‌ கழகத்‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்களும்‌ – விடுதலை சிறுந்தைகள்‌ கட்சித்‌ தலைவர்‌ தொல்‌.திருமாவனவன்‌ அவர்களும்‌ இன்று தொகுதி உடன்பாடுகள்‌ குறித்து கலந்துபேசியதில்‌, விடுதலை சிலுத்தைகள்‌ கட்சி, தமிழகத்தில்‌ 6 சட்டமன்றத்‌ தொகுதிகளை பங்கிட்டுக்‌ கொள்வதென முடிவுசெய்யப்பட்டது.

இந்த பேச்சு வார்த்தையின்போது பொதுச்செயலாளர்கள்‌ சிந்தனைச்செல்வன்‌, டி. இரவிக்குமார்‌, எம்பி, பொருளாளர்‌ முகமது யூசுப்‌, கழகப்‌ பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌, பொருளாளர்‌ டி.ஆர்‌.பாலு, முதன்மைச்‌ செயலாளர்‌ கே என்‌.நேரு, துணைப்‌ பொதுச்செயலாளர்கள்‌ ஐ.பெரியசாமி, எம்‌.எல்‌.ஏ. பொன்முடி, எம்‌.எல்‌.ஏ சுப்புலட்சுமி ஜெகதீசன்‌, கழக அமைப்புச்‌ செயலாளர்‌ ஆர்‌.எஸ்‌.பாரதி, எம்‌.பி, உயர்நிலை செயல்திட்டக்கூழு உறுப்பினர்‌ எ.வ.வேலு, எம்‌.எல்‌.எ., ஆகியோர்‌ உடனிருந்தனர்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0