வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு : 28ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம்..!

21 September 2020, 12:56 pm
dmk all party meet - updatenews360
Quick Share

சென்னை : மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் வரும் 28ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் அறிவிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்ட மசோதாக்களுக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்ததற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக, மாவட்ட தலைநகரங்களில் வரும் 28ம் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

Views: - 1

0

0