விஜய் பற்ற வைத்த நெருப்பு : பதறி ஓடி வந்த திமுக.. 75 ஆண்டு திமுக வரலாற்றில் புதுசு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2024, 8:11 pm

தமிழகத்தில் விஜய் தீபாவளி வாழ்த்து முதல் ஆளாக சொன்னதால் திமுக வயிற்றில் புளியை கரைத்தது. இதனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் முதல் முறையாக தீபாவளி வாழ்த்து சொல்லி உள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் எடுப்பது, பட்டாசுகள் வாங்குவது என பொதுமக்கள் ஆர்வமுடன் இயங்கினர். சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 14,000 சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கியது.

ஒவ்வொரு தீபாவளிப் பண்டிகையின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமுக சார்பில் இதுவரை தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டார்கள்.
இதனால் திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

அதே சமயம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்சித் தலைவராக இல்லாமல் முதல்வராக மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், அரசுத் தரப்பில் இருந்து எந்த பதிலும் வந்ததில்லை.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு, அமைதி, செல்வம் நிலைத்து நீடித்திருக்கட்டும். தீபாவளி திருநாளைப் பாதுகாப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். என தெரிவித்து இருந்தார்.

கட்சி தொடங்கிய சில நாட்களிலே வெற்றிகரமாக மாநாட்டை நடத்திய விஜய் முதல் ஆளாக தீபாவளி வாழ்த்து கூறியதால், திமுகவுக்கு ஜுரம் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் வயிற்றில் புளியை கரைத்தது. இதையடுத்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இறுதியாக, திராவிடம் என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆளுநருக்கு அலர்ஜியாகிவிடும்.

கலைஞரின் உயிரினும் மேலான கழக உடன் பிறப்புகள் இருக்கும் வரை தமிழகத்தையும் திராவிடத்தையும் எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றார்.

மேலும்,நலத்திட்ட உதவிகளைப் பெற்ற அனைவருக்கும் திமுக பவள விழா ஆண்டு வாழ்த்துகள். நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்கு தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியதாவது: உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்கள் சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளி இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுக்கக் கூடியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு முதல் தீபாவளியாக இந்த தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விசயங்களை எடுத்துக் கொண்டு தீய விசயங்களை ஒழிக்க வேண்டும். நாட்டின் வளச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
திமுக என்ற நரகாசுரனை 2026-ல் ஒழித்த பிறகு தீபாவளி பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுவோம் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவே மாட்டோம் என இருந்தவர்கள் தற்போது வாயை திறந்து வாழ்த்தி இருக்கிறார்கள். மேலும் விஜய் கூட தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள் என கூறினார்.

அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்கள் பெருகட்டும்,தலைவர்கள் தீப ஒளித்திருநாள் வாழ்த்து தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது. அனைத்து திருவிழாக்களுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை. அவரும் வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

தீபாவளி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கூறியிருப்பதாவது:தமிழகத்தை சூழ்ந்த சமூகஅநீதி இருள் விலகி ஒளி பிறக்க தீபஒளி வகை செய்யட்டும்.

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதர்களால் தனித்து வாழ முடியாது. மனிதர்கள் தங்களின் உறவுகள், நண்பர்களுடன் ஒன்று கூடவும், மகிழ்ச்சியடையவும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொண்டாட்டங்கள் அவசியமாகும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காகத் தான் தீபஒளித் திருநாள் போன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் தீபஒளித் திருநாள் மகிழ்ச்சிக்கான கருவி.
தமிழ்நாட்டின் முதன்மைத் தொழில் வேளாண்மை. கழனி செழித்தால் தான் மக்கள் மனமும் செழிக்கும். ஆனால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தண்ணீர் இல்லாமல் படுதோல்வி அடைந்துள்ளது. விளைவித்த பயிர்களுக்கும் உரிய விலை கிடைக்காததால் கொண்டாட்ட மனநிலையில் திளைக்க வேண்டிய மக்கள் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் துயரத்தைப் போக்கி நிம்மதியை அளிக்க வேண்டிய அடிப்படைக்கடமையைக் கூட அரசு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் முதல்முறையாக கட்சி துவங்கிய விஜய் முதல் ஆளாக தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இதை ஜீரணிக்க முடியாத திமுக இந்துக்களின் ஓட்டுக்கள் விஜய் பக்கம் சென்று விடக்கூடாது என திட்டமிட்டுள்ளது.

இதனால் அவசர அவசரமாக முதல்வர் ஸ்டாலினின் ரகசிய உத்தரவின் பேரில் உதயநிதி ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களுக்கு புதுமையாகவும் அதே நேரத்தில் புதிராகவும் உள்ளது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: தி.மு.க., தலைவர்களுக்கு ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. தங்களை பகுத்தறிவாதி இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக அந்த தயக்கம் இருக்கிறது. அதனால் தான் முதல்வர் ஸ்டாலின் ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை.

அதேநேரத்தில் மற்ற மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகளுக்கு முன்தினமே, மேடைப்பேச்சு வாயிலாகவோ, சமூகவலைதள வாயிலாகவோ முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விட்டு வாழ்த்து தெரிவிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். விஜய்யும் பகுத்தறிவு கொள்கையையும் பெரியாரின் சிந்தனைகளையும் தங்களுக்கு பிடிக்கும். அதற்காக பெரியாருக்கு கட்அவுட் வைத்துள்ளோம்.

அதே நேரத்தில் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கை மட்டும் தங்களுக்கு பிடிக்காது என கருத்து தெரிவித்திருந்தார். தற்போது விஜய் தான் திமுகவுக்கு ரோல் மாடலாக மாறி வருகிறார். 75 ஆண்டு கால திமுக முதல்முறையாக தீபாவளி வாழ்த்து சொல்லி இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அதுவும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இதைபோல மற்ற மதத்தினர் கொண்டாடும் திருவிழாக்களில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும் இந்த திருவிழா வாழ்த்துக்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறுவாரா. கூறிவிட்டு அவர்களால் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஈயம் பூச வேண்டும் அது பூசாது போல் இருக்க வேண்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்த்தும் தெரிவிக்க வேண்டும் .அதேபோல வாழ்த்துக்கள் தெரிவிக்காதது போலவும் நடிக்க வேண்டும் என இரட்டைவேடம் போட்டு இருதலைக்கொல்லியாய் மாறி உள்ளனர். தலைவன் பகுத்தறிவு கொள்கையில் புடம் போட்ட தங்கமாக ஜொலிப்பாராம். தலைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீக பத்தியில் அமிர்தமாய் திளைப்பாராம். தலைவன் ஒரு பாதை ..தலைவி ஒரு பாதை … இதுதான் திமுகவின் கீதை… என்று இருந்த நிலையை விஜய்யின் வாழ்த்து மாற்றி இருக்கிறது.

திமுகவில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். தற்போது 90 சதவீதம் இந்துக்களும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆதாயம் இல்லாமல் யாராவது ஆற்றைகட்டி இரைப்பார்களா.

தேர்தல் நெருங்குவதால் இந்துக்கள் மீதுள்ள பற்றும் திமுகவுக்கு நெருங்கியுள்ளது. இதுவரை உறங்கிய திமுகவை விஜய் தண்ணீர் தெளித்து எழுப்பி உள்ளார்.
தீபாவளியை கடவுள் மறுப்பு கொள்கை உடைய சமணர்களும்,புத்திஸ்ட்டுகளும் கொண்டாடுகிறார்கள். தீய எண்ணங்களை அகற்றி நல்ல சிந்தனைகளை விதைக்கும் தீப ஒளி பெருகும் நாளை தான் தீபாவளி என கொண்டாடுகிறோம். இந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கு முதல்வர் தயக்கம் காட்டுவது, விடியல் அரசுக்கு விந்தையாக உள்ளது. இனி வரும் காலங்களில் அனைத்து இந்து பண்டிகைகளுக்கும் விஜய் வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.

இதனால் திமுகவும் இதற்கு வாழ்த்து தெரிவிக்குமா என்று தெரியவில்லை. மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என உணர்த்தும் தீப திருநாள் வாழ்த்துக்களை திமுக தொடர்ந்து கூறுமா, இல்லை முன்பு போல் இல்லாமல் மாறுமா என்பது விடியல் அரசுக்கே வெளிச்சமாகும், என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 122

    0

    0