விஜய்க்கு எதிராக தந்தை எஸ்.ஏ.சி.யை தூண்டி விட்டது இவர்தானா..? திமுக மீது கடுப்பில் விஜய் ரசிகர்கள்..!!!

12 November 2020, 5:15 pm
vijay and his father - updatenews360
Quick Share

ஈரோடு மாவட்டம் பவானியில் மறைந்த திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமியின் படத்திறப்பு விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். ரங்கசாமியின் படத்தை திறந்து வைத்த அவர், பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆரம்பித்த கட்சியுடன் திமுக கூட்டணி அமைக்குமா..? என்ற கேள்வியை எழுப்பினர். இதற்கு பதிலளித்த உதயநிதி, இதனை அவரிடம்தான் கேட்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும், 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் போட்டியிடும் தொகுதி எது..? என்ற கேள்விக்கு, அது தலைமைதான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

Udhayanithi Stalin - Updatenews360

நடிகர் விஜய்நடிப்பில் உருவான குருவி படத்தை தயாரித்தவர் உதயநிதி. அப்போதே, நடிகர் விஜயை அரசியலுக்கு அழைத்து வந்து, தனக்கு ஆதரவாக வைத்துக் கொள்ள வேண்டும் என உதயநிதி விருப்பப்பட்டாராம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே கருணாநிதி என்று கூறப்படுகிறது. ஆனால், இதற்கு நடிகர் விஜய் உடன்படவில்லை. இருப்பினும், சன்பிக்சர்ஸ் மூலமாக விஜயின் பல்வேறு படங்களை தயாரித்து, அவருக்கு அரசியல் வலை வீசப்பட்டதாம். ஆனால், எதற்கும் அவர் அடிபணியவில்லை.

பட ஆடியோ வெளியீட்டு விழாக்களில், ‘பஞ்ச் பேசி, அவர் சொல்லும் குட்டி கதைகள்’ கூட திமுகவினரையும், உதயநிதியையும் மனதில் வைத்து தான் கூறியதாக விஜயின் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து வெளியாகும் செய்திகள் தற்போது உலா வருகின்றன.

இருப்பினும், தங்களது முயற்சியில் விடா பிடியில் இருந்த உதயநிதி மற்றும் திமுக, விஜய்க்கு தளபதி பட்டம் கொடுத்தும் உசுப்பேற்றின. ஆனால், ‘உசுப்பேத்தும் போது உம்முனும், கடுப்பேத்தும் போது கம்முனும் இருந்தா வாழ்க்க ஜம்முனு’, இருக்கும் என அவர் கூறியதை, அவரே கடைபிடிச்சதுனாலா, திமுகவின் முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளது.

திமுகவின் திட்டத்திற்கு அவர் அடிபணியாமல் போகக் காரணம், தனக்கென்று ஒரு கட்சியை ஆரம்பித்து, அதில் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே விஜயின் திட்டம் என்று கூறுகிறார்கள்.

மகன், மனைவி என எதிர்த்து குடும்பமே இரண்டானாலும், கட்சி தொடங்கியே தீருவேன் என்னும் எஸ்.ஏ.சி.யின் பிடிவாதத்திற்கு பின்னணியில், உதயநிதியின் இன்று அளித்த பேட்டி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Views: - 25

0

0