திமுகவை எதிர்க்கும் ஊடகவியலாளர்கள் மீதான நடவடிக்கை…! பின்னணியில் இருப்பவர் யார்…?

4 August 2020, 11:27 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக ஊடகத்துறையின் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு திமுக காரணம் என்று கருத்து வலுவாக முன் வைக்கப்படுகிறது.

தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக முக்கிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக பத்திரிகை துறைகள் மீது தாக்குதல்கள் பெரும் விவாத களமாக மாறி இருக்கின்றன. அதன் அடுத்தக்கட்டமாக சம்பந்தப்பட்ட நபர்கள், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

இதன் பின்னணியில் திமுகவின் வலுவான அழுத்தம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கான அடிப்படை காரணங்களும் இருக்கின்றன. தொடர்ச்சியான ஊடகங்களின் மீதான தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவின் பெயர் ஊடக கண்காணிப்பு குழு. இந்த குழு அமைக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அரசு தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசிய நபர் கைது, கிஷோர் கே. சுவாமி வழக்கு, மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இவர்கள் மீதான நடவடிக்கைகளுக்கு திமுகவின் அழுத்தம் காரணமா என்பது குறித்து விசாரித்த போது பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து விளக்கிய திமுகவினர், அனைத்துக் கட்சி கூட்டத்தில் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்ட பின்னர் தான் ஒரு குழு அமைக்கப்பட்டது.

dmk update news360

அந்த குழுவின் ஆலோசனை கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் தரும் புகார்கள் மீது எடுக்கப்படாத நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, அதை வேகப்படுத்த வேண்டும் என்றும் முடிவு எடுத்தோம் என்கின்றனர் திமுகவினர். அதனையொட்டி பேசி பல கருத்துருக்களை முன் வைத்து பாதிக்கப்படும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாகவும், திராவிட சிந்தளையாளர்களின் கருத்துகள் நசுக்கப்பட கூடாது என்பதற்காக ஊடக நிறவனங்களிடம் கடிதங்கள் கொடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

ஊடக கண்காணிப்புக் குழுவின் இந்த நடவடிக்கைகளுக்கு பின்னால், நெருக்கடி ஏற்படவே அரசு தரப்பு சுறுசுறுப்பாக இயங்கி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் திமுக தரப்பில் முன் வைக்கப்படுகிறது.

இதே கருத்துகளை தான் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினரும் முன் வைக்கின்றனர். ஆனால் இந்த கருத்துக்களத்தில் இருந்து சற்றே அதிமுக விலகி இருக்கிறது. திமுக அமைத்த குழுவில் இடம்பெற்றவர்களே பாஜக மீதும், அதிமுக மீதும் தரம்தாழ்ந்து விமர்சனங்களை முன் வைக்கின்றனரே என்று கூறுகின்றனர்.

BJP_Flags_UpdateNews360

பாஜக தரப்பினரோ, ஊடகத்தில் இருப்பவர்கள் தனிப்பட்ட கருத்துகளுடன் இருக்கலாம். ஆனால் அதை அவர்கள் நடுநிலைத்தன்மையுடன் ஒப்பிட்டு தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஆனால், பத்திரிகையாளர்களின் கருத்துகள் முற்றிலும் வேறாக இருக்கிறது. ஊடக விவாதங்களில் நெறியாளர்களின் கேள்விகள் சில ஒரு சார்பு உடையதாகவே இருக்கும் போது அதற்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். ஊடகங்கள் மீதான ஆளுங்கட்சியின் அழுத்தம் இருக்கிறது என்பது ஒப்புக்கொள்ளப்படும்போது, அரசியலாக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 7

0

0