திமுக – காங்., இடையே தொகுதி பங்கீடு உடன்பாட்டில் சுமூகம் : பேச்சுவார்த்தை நிறைவு

25 February 2021, 11:31 am
congress - dmk - updatenews360
Quick Share

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்., கட்சியினரிடையேயான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டஜன் கணக்கிலான கட்சிகளை கூட்டணியில் வைத்துள்ள திமுக, தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்து வந்தது. திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியான காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடித்தால் மட்டுமே, பிற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்ற நிலை உள்ளது.

ஆனால், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களில் அடைந்த தேர்தல் படுதோல்வியினால், காங்கிரசுக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை இந்த முறை ஒதுக்க திமுக தயக்கம் காட்டி வந்தது. அதோடு, 15 தொகுதிக்கு கூடுதலாக வழங்க முடியாது என்பதில் ஸ்டாலின் திட்டவட்டமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதனால், இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி தொடருமா..? என்ற சிக்கலான சூழல் நிலவி வந்தது.

இந்த நிலையில், திமுக – காங்கிரஸ் கட்சியினரிடையே வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் ஸ்டாலின், டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல, காங்கிரஸ் தரப்பில் கேஎஸ் அழகிரி, உம்மன் சாண்டி, தினேஷ் குண்டுராவ் பங்கேற்றனர்.

சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்தையில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Views: - 8

0

0