நான் செத்தா திமுக கவுன்சிலர்தான் காரணம் : கண்மூடித்தனமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதவராளர் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 8:29 pm
Dmk Councilor - Updatenews360
Quick Share

கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் தனது ஆதரவாளரையே தாக்கி கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலரின் செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி 176 வார்டு திமுக கவுன்சிலர் வே.ஆனந்தம். இவருக்கும் இவரது ஆதரவாளரான சதீஷ் என்பவருக்கும் இடையே அரசு வேலை வாங்கி தருவது தொடர்பாக பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பிரசனை தொடர்பாக கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து சதீஷ் என்பவரை கவுன்சிலர் ஆனந்தம், அவரது மைத்துனர் பிரபு, மற்றும் ஆர்.கே.குட்டி ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் கடுமையாக தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டதாக சதீஷ் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் நான் இறந்தால் அதற்கு திமுக கவுன்சிலர் ஆனந்தம் தான் காரணம் என்றும் ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். 12 வருடமாக பழகி தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் அந்த ஆடியோவில் அவர் குமுறியுள்ளார்.

தற்போது சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையால் தனது ஆதரவாளரையே நையைப் புடைத்த திமுக கவுன்சலரின் செயல் வாக்களித்த மக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 151

0

0