உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசை கழற்றிவிட திமுக முடிவு? தேனிலவு முடிந்துவிட்டதாக கே.எஸ். அழகிரி அறிவிப்பு!!

4 July 2021, 5:00 pm
DMK Congress - Updatenews360
Quick Share

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, மனதில் தோன்றுவதை அப்படியே பேசக் கூடியவர் என்று கூறுவார்கள். அதேபோல் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை யாருக்காகவும் விட்டுக்கொடுக்கமாட்டார் என்றும் சொல்வதுண்டு.

சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்துவதற்காக அண்ணா அறிவாலயம் சென்றபோது, அங்கு தன்னை திமுக தலைமை நிர்வாகிகள் நடத்திய விதம் குறித்து வெளிப்படையாகப் பேசி கண்ணீர் விட்டார்.

Lok Sabha polls 2019: Congress, DMK hold talks for identifying  constituencies- The New Indian Express

கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் இதுபோன்ற விஷயங்கள் சர்வ சாதாரணம் என்றாலும், தமிழக அரசியல் வரலாற்றில், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத்தலைவர் கண்ணீர் விட்டு அழுததது, அதுதான் முதல் முறை.

அடுத்து ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஒருபோதும் அவர் மாற்றிக் கொண்டதில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியபோது, அதை கே.எஸ். அழகிரி வன்மையாக கண்டித்தார். “நீதிமன்றம் அந்த 7 பேரை விடுதலை செய்தால் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் தலைவர்களுக்கு, இதுபோன்ற விஷயங்களில் அழுத்தம் கொடுக்கக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

இந்த இரண்டு நிகழ்வுகளுமே திமுக தொடர்புடையவை. கடந்த 5 மாதங்களுக்குள் நடந்தவை.

இதோ! கே.எஸ்.அழகிரியிடம் இருந்து இன்னொரு உண்மை அவரது வாயாலேயே வெளிப் பட்டிருக்கிறது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

Alliance with DMK: Cong gets 9 LS seats in Tamil Nadu, one in Puducherry |  Chennai News - Times of India

கட்சியின் டெல்லி மேலிடம் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் வருகிற 7-ம் தேதி முதல் 17-ம் தேதி முடிய மத்திய அரசுக்கு எதிராக நடத்தவுள்ள பல்வேறு போராட்டங்களை தமிழகத்தில் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில்
அழகிரி விளக்கி பேசினார்.

அவருடைய பேச்சில், போராட்ட வியூகங்களை விட தமிழக காங்கிரசின் தற்போதைய நிலை குறித்த கவலையே அதிகம் தென்பட்டது.

திமுகவுடன் கூட்டணி முடிந்து போனதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கு ஏற்ப ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் கட்சியை வளர்க்க வேண்டியதன் கட்டாய நிலை குறித்தும் கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி இருக்கிறார்.

After week-long drama, Congress finalises poll-pact with DMK in Tamil Nadu;  to contest in 25 seats- The New Indian Express

அழகிரி பேசியது, இதுதான்.

“காங்கிரசை தமிழகத்தில் அமைப்பு ரீதியாக வலுப்படுத்தினால்தான் மட்டுமே தேர்தலின்போது நமக்கு இத்தனை இடங்கள் வேண்டும் என்று பேரம் முடியும். எனவே கட்சியின் அடிமட்ட அமைப்பைப் பலப்படுத்தும் வேலைதான் இப்போதைக்கு முக்கியம். முன்பிருந்ததை விட காங்கிரசின் அமைப்பு பலம் தற்போது அதிகரித்திருப்பதால்தான் நாம் போட்டியிட்ட 25 தொகளில்
18-ஐ கைப்பற்றினோம். கூட்டணி கட்சிகளும் நமக்கு முழு ஒத்துழைப்பு தந்தன.

தேர்தல் காலத்தோடு நமது தேனிலவு முடிந்துவிட்டது. அதனால் தொடர்ந்து அதே மன நிலையில் யாரும் இருக்க வேண்டாம். புகழ் பாடும் காலம் முடிந்து இனி நமக்கு போராட்டக் காலம்.
காங்கிரசின் ஒற்றை இலக்கு மோடியை பிரதமர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு அங்கே ராகுல்காந்தியை உட்கார வைப்பதுதான். அதனால் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் கோஷ்டி சண்டைகளை ஓரமாக ஒதுக்கி வையுங்கள்.

TNCC remarks on alliance lead to DMK'S boycott | Deccan Herald

யாருக்கும் எந்த பதவியும் நிரந்தரம் கிடையாது. அது தெரிந்துதான் அரசியலிலேயே இருக்கிறோம். விரைவில் தமிழக காங்கிரஸ் 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தலைவர்களை நியமித்து அதிகாரத்தை பரவலாக்கப் போகிறோம். அதேபோல் சட்டப் பேரவை தொகுதிக்கு ஒரு தலைவர் நியமிக்கப்படுவார். அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இருந்தால்தான் அடுத்த தேர்தலில் நாம் அங்கே போட்டியிடுவோம். கட்சியை வளர்க்க மாட்டோம், சீட்டு மட்டும் வேண்டுமென்றால் அது சரியல்ல. தொகுதியளவில் கட்சியை வளர்த்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் நிறைய இடங்களில் போட்டியிட முடியும். எனவே முதலில் அமைப்பை வலுப்படுத்தும் வேலைகளில் இறங்குங்கள்”என்று குறிப்பிட்டார்.

அழகிரி தனது பேச்சின் மூலம் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 3 முக்கியமான தகவல்களை சொல்லி இருக்கிறார். தேர்தல் காலத்துடன் தேனிலவு முடிந்து போய்விட்டது என்று அவர் கூறுவதால், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இருக்குமா? இருக்காதா? என்ற கேள்வி எழுகிறது. இந்த சந்தேகம் அழகிரிக்கே உள்ளதுபோல் தெரிகிறது. எனவே இதை, கூட்டணி கிடையாது என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.

புகழ்பாடும் காலம் முடிந்துவிட்டது என்று அவர் கூறுவதை திமுக ஆட்சியில் குறைபாடுகள் இருந்தால் சுட்டிக்காட்டத் தயங்காதீர்கள் என்று கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்துவதுபோல் இருக்கிறது.

கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்காமல், தேர்தல் நேரத்தில் பணத்தை மட்டுமே அஸ்திரமாக வைத்து சீட் பெறுவதை ஒடுக்குவதற்கான நடவடிக்கையாகத்தான், தொகுதியில் கட்சியை வளர்ப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை அழகிரி கறாராக கூறியிருக்கிறார். அதேபோல் கட்சிக்குள் இருக்கும் ஏகப்பட்ட கோஷ்டிகளையும் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி இருக்கிறார்.

அழகிரியின் தேன்நிலவு பற்றிய பேச்சு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசை கழற்றி விடும் முடிவுக்கு திமுக வந்திருப்பதை அழகிரி உறுதி செய்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் நடக்கவுள்ள 9 மாவட்டங்கள்,15 மாநகராட்சிகள் ,148 நகராட்சிகளை திமுக தன் பிடிக்குள் முழுமையாக கொண்டு வர நினைக்கிறது. அதனால் காங்கிரசை கூட்டு சேர்ப்பது கடினம். மேலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 34 தொகுதிகளில் போட்டியிட திமுக விரும்புவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

In Tamil Nadu poll manifesto, Congress promises jobs, tax exemption for  startups - Hindustan Times

ஏற்கனவே 2019-ல் உள்ளாட்சி தேர்தல் நடந்த 28 மாவட்டங்களில் திமுக பெரும்பான்மை இடங்களை வென்று இருப்பதால் மீதமுள்ள மாவட்டங்களிலும் தனது கை ஓங்கி இருக்கவே விரும்பும். சுமார் 80 சதவீத இடங்களை கைப்பற்றி விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடலாம் என்று திமுக கணக்கு போடுகிறது.

அதன்மூலம் மத்தியில் எந்தக்கட்சியின் ஆட்சி அமைந்தாலும் தங்களுடைய ஆதரவு தேவை என்கிற ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த திமுக விரும்புகிறது. அதற்கான பரிசோதனை முயற்சியாக உள்ளாட்சி தேர்தல் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கழற்றி விடப்படலாம். அதை நன்கு உணர்ந்து இருப்பதால்தான் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரசை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என அழகிரி பேசியிருக்கிறார் என்பது வெளிப்படை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 207

0

0