‘உதயநிதியை கொஞ்சம் அடக்கி வையுங்கள்’ : ஜாடைமாடையாக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட செயலாளர்கள்..!!

3 November 2020, 5:34 pm
udhayanidhi - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாவட்ட நிர்வாகிகளை திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்து பேசி வருகிறார். மண்ட வாரியாக நடந்த இந்த சந்திப்பின் போது, சில நிர்வாகிகளை மட்டுமே தனியே அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், இளைஞர் அணியினரின் செயல்பாடுகளை சற்று அடக்கி வைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

குறிப்பாக, திருச்சி, தஞ்சை பகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஸ்டாலினிடம் பல்வேறு புகார்களை அளித்துள்ளனர். இளைஞர் அணியின் பொறுப்பாளர்களை நியமிக்க வசூல் வேட்டை நடத்துவதாகவும், மாவட்ட அளவிலான இளைஞர் அணி நியமனங்களில் கூட கலந்தாலோசிப்பது இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Stalin - all party meet - updatenews360

மேலும், இளைஞர் அணி நிர்வாகிகள், நிழல் மாவட்ட செயலாளராக செயல்படுவதாகவும், சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, தற்போதே பணம் வசூலிக்க தொடங்கி விட்டதாகவும் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, பணத் பெற்றுக் கொண்டு தகுதியற்ற நபர்களுக்கு பொறுப்புகளை வழங்கி வருவதாகவும், இந்த அத்தனை பணிகளையும் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருக்கும் 2 பேர்தான் செய்து வருவதாக அவர் கூறியுள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ள அந்த 2 பேர் மீது ஸ்டாலினால் கூட நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அந்த இருவரில் ஒருவர் அடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் என்று தற்போதே கூறி வருவதாகவும், மற்றொருவர் தனக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டுமோ, அது கிடைக்கும் என சூளுரைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

DMK 21 MLA - Updatenews360

இதனிடையே தங்கள் மீது புகார்களை அளித்த மாவட்ட செயலாளர்களின் விபரங்களை அந்த இருவர் திரட்டி வருவதாகவும், இதனால், மாவட்ட செயலாளர்கள் – இளைஞர் அணி நிர்வாகிகள் இயே பனிப்போர் நிலவி வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன.

Views: - 22

0

0