திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் திடீர் அனுமதி : தொண்டர்கள் கவலை..!!

By: Babu
4 January 2021, 4:57 pm
Duraimurugan - Updatenews360
Quick Share

வேலூர் : திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பள்ளேரி, கொண்டக்குப்பம் மற்றும் மருதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் பங்கேற்று மக்களிடம் கலந்துரையாடி வந்தார்.

இந்த நிலையில், கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை செல்லவிருந்த துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மேல்விஷாரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 106

0

0