கு.க. செல்வம் திமுகவுக்கு ஒரு பொருட்டே கிடையாது..! துரைமுருகன் ‘கலகல’…!

5 August 2020, 9:50 pm
Duraimurugan- updatenews360
Quick Share

சென்னை: கு.க செல்வத்தை ஒரு பொருட்டாகவே திமுக கருதவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

ஸ்டாலின் ஒரு காலத்தில் எம்எல்ஏவாக இருந்த ஆயிரம் விளக்கு தொகுதியின் இப்போதைய திமுக எம்எல்ஏ கு.க.செல்வம். டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை நேரில் சந்தித்தார்.

அரசியல் அரங்கில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சந்திப்பு. அவர் பாஜகவில் இணைகிறார் என்று தகவல்கள் பரவின. நட்டாவை சந்தித்த கையோடு சென்னை வந்த கு.க. செல்வம், தமிழக பாஜக தலைமையகமான கமலாலயத்துக்கு சென்றார்.

அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். அந்த கட்சியில் வாரிசு அரசியல் தலைதூக்குகிறது என்று ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.

திமுகவில் இருந்து நீக்கினாலும் கவலைப்பட மாட்டேன் என்று ஆவேசப்பட்டார். பாஜகவில் இன்னமும் இணையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக அரசியல் களம் இப்படி இருக்க, கு.க. செல்வத்தை நாங்கள் மதிப்பதே இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:

கு.க செல்வத்துக்கு ஒன்றும் தெரியாது. அவர் குறித்து பேச ஒன்றும் இல்லை. மக்களை ஈர்க்கும் சக்திமிக்க தலைவர் கிடையாது. அவரை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதியது கிடையாது. திமுகவில் இருந்து எம்ஜிஆர், சம்பத், வைகோ போன்றவர்கள் ஒரு கட்டத்தில் பிரிந்து சென்றனர்.

அப்போது திமுக இதுபோன்ற சிறிய சிக்கல்களை சந்தித்தது. ஆனால் வி.பி. துரைசாமி, கு.க. செல்வம் போன்றவர்களால் எந்த சிக்கலும் இல்லை. இவர்கள் மக்களை கவர்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்.

Views: - 7

0

0