கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வந்தவர்களை தாக்கிய திமுக பிரமுகர் ; தகாத வார்த்தைகளில் திட்டி விரட்டியடித்த அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
20 March 2023, 2:35 pm
Quick Share

கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வாங்கிச் செல்ல வந்தவர்களை திமுக ஒன்றியச் செயலாளரின் ஆதரவாளர்கள் அடித்து விரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய செயலாளராக இருப்பவர் அடிலம் அன்பழகன். இவர் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராவார். காரிமங்கலம் பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தனது கடைக்கு தேவையான துணிகளை போத்தீஸ் சில்க்ஸ் மற்றும் மாட்டலாம்பட்டியில் உள்ள சில வணிகர்களிடம் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், போத்தீஸ் உள்பட பல்வேறு வணிகர்களிடம் துணியை வாங்கிக் கொண்டு, பணத்தை கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 லட்சம் வரையில் கொடுக்க வேண்டியது இருப்பதாக சொல்லப்படுகிறது.

துணியை கொள்முதல் செய்ததற்கான பணத்தை கேட்டு வருபவர்களிடம் ‘நாளை பார்க்கலாம்.. நாளை பார்க்கலாம்’ என்று காரணத்தை சொல்லி, இழுத்தடித்து வந்துள்ளார். அதுமட்டுமில்லாமல், பணத்தை கொடுக்குமாறு நெருக்கடி கொடுப்பவர்களை, ஆளுங்கட்சி என்று தொனியிலும், அமைச்சரின் ஆதரவாளர் என்ற இருமாப்பிலும், “பணத்தை தர முடியாது, முடிந்ததை பார்த்துக் கொள்,” என்று அடியாட்களை வைத்து மிரட்டுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழலில், கொடுக்க வேண்டிய பணத்தை கேட்டு வந்த வணிகர் ஒருவரை திமுக ஒன்றிய செயலாளர் அடலம் அன்பழகன், தனது அடியாட்களை ஏவிவிட்டு சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், அந்த நபரை அசிங்கமான வார்த்தைகளை சொல்லி திட்டும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 198

0

0