திமுக செயற்குழு உறுப்பினருக்கு அரிவாள் வெட்டு : சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளுக்கு வலைவீச்சு..!

13 October 2020, 5:30 pm
dmk attack - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே. நகரில் அமைந்துள்ள திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரான தனசேகரன் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், தனசேகரனை சரமாரியாக தாக்கினர். மேலும், அலுவலகத்தில் இருந்த பெண் ஊழியரையும் தாக்கி விட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த திமுக நிர்வாகி தனசேகரன் தனியார் மருத்துவமனையிலும், அலுவலகப் பெண் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Views: - 63

0

0