எச்சை சோறு.. பாதியிலே ஓடி வந்த பொ*** அண்ணாமலை ; ஆளுநரை செருப்பால அடிப்பேன் ; திமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு

Author: Babu Lakshmanan
13 January 2023, 5:44 pm
Quick Share

சட்டசபையில் உரையாற்றிய ஆளுநர் ஆர்என் ரவி, அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தார். இதனைக் கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் அவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

ஆளுநரின் இந்த செயல் சட்டப்பேரவையின் மரபை மீறியது என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், ஆளுநர் உரையின் போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தான் மரபை மீறியது என்றும், உண்மைக்கு புறம்பாக தமிழக அரசு எழுதிக் கொடுப்பதை ஆளுநர் படிக்க வேண்டும் என்று நினைப்பது தவறானது என்று பாஜக உள்ளிட்ட கட்சியினர் பதில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சட்டசபையில் நடந்த நிகழ்வுகளின் வீரியத்தை உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநரை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ கூடாது என்று திமுகவினருக்கு உத்தரவிட்டார். அவர் உத்தரவிட்ட பிறகும், திமுகவினர் ஆளுநர் ஆர்என் ரவியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக பிரமுகரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநர் ஆர்என் ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுகவினரை, தகாத வார்த்தைகளை சொல்லி அசிங்க அசிங்கமாக திட்டி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழக அரசு எழுதி கொடுத்ததை முழுமையாக படிக்காத ஆளுநரை தகாத வார்த்தையில் பேசியும், அவரை செருப்பால அடிப்பேன் என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து, அம்பேத்கர் பெயரை சொல்லாத அவரை, ஜம்மு காஷ்மீருக்கு சென்று விடலாம் என்றும், அங்கு தீவிரவாதிகளை அனுப்பி கொல்வோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், தனது பதவியை பாதியிலேயே ராஜினிமா செய்து வந்த அண்ணாமலை எனக் கூறி அசிங்கமான வார்த்தையில் விமர்சித்த திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பிரான்ஸ்ல தயாரித்த கடிகாரத்தை கட்டிக்கொள்வதுதான் தேசபக்தியாடா..? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், வாரிசு அரசியல் குறித்து பேசினார். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு ஆண்மை இருப்பதால் வாரிசு அரசியல் நடத்துவதாகவும், ஆண்மை இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்லுமாறு கிண்டலாக குறிப்பிட்டார்.

அதோடு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அதிமுக குற்றம்சாட்டி வருவது குறித்து பேசிய அவர், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கேளியாக குறிப்பிட்டு, ஜெயலலிதா மரணம் எப்போது நடந்தது என்று சொல்லும் யோகிதை இருக்கிறதா..? என அதிமுகவுக்கு கேள்வி எழுப்பினார்.

கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் பேசுவது சர்ச்சையாகி வந்த நிலையில், தற்போது திமுக நிர்வாகியின் நாகரீகமற்ற பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Views: - 450

0

0