அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி ஒருவர், பாஜக பிரமுகரான குஷ்புவை ஆபாசமாக விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வுக்கு நன்றி பாராட்டும் பொதுக்குழு விளக்கக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை ஆர்கே நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
அமைச்சர் மேடையில் அமர்ந்திருந்த போது, திமுக நிர்வாகியான சைதை சாதிக் என்பவர் பாஜக குறித்தும், பாஜக மகளிர் நிர்வாகிகள் பற்றியும் தகாத வார்த்தைகளில் விமர்சித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், திமுகவினரே, அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதை, மேடையில் இருந்த அமைச்சர் கண்டிக்காமல், அதற்கு ஆதரவு அளிப்பது போல் சிரிப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாக்கியுள்ளது.
இதுபோன்று அரசியல் நாகரீகம் இல்லாமல் நடக்கும் கட்சி நிர்வாகிகள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
This website uses cookies.