திமுகவின் தோல்விக்காக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் : தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சால் திமுகவினர் அதிருப்தி..!!
24 November 2020, 11:58 amசென்னை : சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக நிர்வாகி தங்கத்தமிழ்ச்செல்வனின் பேச்சால் அக்கட்சியினர் அதிருப்தியடைந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக, திமுக சார்பில் பிரச்சாரமே தொடங்கப்பட்டு விட்டது. ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 100 நாட்கள் பிரச்சாரத்தை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
சின்ன தளபதியின் இந்தச் சுற்றுப்பயணத்தினால் திமுகவிற்கு மவுசு கூடும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், திமுக தலைவர்களையும், தொண்டர்களையும் அதிருப்தியடையச் செய்யும் விதமாக, அக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர் தங்கத் தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.
உதயநிதியின் சுற்றுப்பயணம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திரு. உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அந்தப் பயணம் வெற்றிகரமாக முடியும். இந்தத் தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்,” எனக் கூறினார். இதனால், அவருடன் இருந்த திமுகவினர் மட்டுமின்றி பத்திரிக்கையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அது திமுக இல்ல, அதிமுக எனக் கூறிய பிறகு, தங்கத்தமிழ்ச்செல்வன் சிரித்தபடியே, மன்னித்துக் கொள்ளுங்கள், அதிமுக எனக் கூறிவிட்டு, தான் பேசியதை மாற்றிவிடுங்கள் சாமி எனக் கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
அதிமுக, அமமுகவை தொடர்ந்து திமுக என அடுத்தடுத்து கட்சி மாறி வருவதால், தங்கத்தமிழ்ச்செல்வன் தான் இப்போது எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதைக் கூட மறந்து இதுபோன்று பேசியிருப்பதாக எதிர்தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் நம்பி வரும் நிலையில், அதனை தவிடு பொடியாக்கும் விதமாக, ஒற்றை வார்த்தையைக் கூறி, அவரது பிரச்சாரத்தை நகைப்புக்குள்ளாக்கி விட்டார் தங்கத்தமிழ்ச்செல்வன் என திமுகவினர் கடுப்பில் உள்ளனர்.
0
0
1 thought on “திமுகவின் தோல்விக்காக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் : தங்கத்தமிழ்ச்செல்வன் பேச்சால் திமுகவினர் அதிருப்தி..!!”
Comments are closed.