எம்எல்ஏ பூங்கோதையை தற்கொலைக்கு தூண்டிய திமுகவினர் : நிர்வாகிகளின் காலில் விழுந்தது ஏன்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

19 November 2020, 5:29 pm
Poongothai_ cover 1 updatenews360
Quick Share

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்னதாக, திமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. இவர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது, எம்எல்ஏவாக இருந்து வரும், திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், திமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் உச்சம் அடைந்ததால், அவர் அதிகளவிலான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்படியிருக்க, அரசியலில் நல்ல அனுபவம் கொண்ட ஒரு பெண், இதுபோன்ற தற்கொலை முடிவை கையில் எடுக்க காரணம் என்ன என்று திமுகவினரிடத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, நேற்று தென்காசி கடயம் பகுதி திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், கலந்து கொண்ட பூங்கோதைக்கு பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், அனைவரின் முன்னிலையிலும் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், மனமுடைந்த அவர் இருக்கைகளில் அமராமல் தரையில் அமர்ந்து, திமுக நிர்வாகிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது, நிர்வாகிகளின் காலில் விழுந்து அவர் தர்ணாவை நடத்தினார்.

இதற்கு காரணம், தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், ஆலங்குளம் தொகுதியில் திமுகவின் சார்பில் பூங்கோதையை ஓரங்கட்டி விட்டு, அவருக்கு போட்டியாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என பூங்கோதையின் எதிர்ப்பாளர்கள் முடிவு செய்ததுதான் என அவர்கள் கூறுகின்றன.

தொகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையிலும், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே தன்னை அவமதித்து ஓரங்கட்டியதை பூங்கோதையினால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்றும், அதனாலேயே இந்த விபரீத முடிவை அவர் கையில் எடுத்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, உட்கட்சி பூசலில் திமுக திளைத்துக் கொண்டிருப்பதை அறிந்து, மண்டல வாரியாக நிர்வாகிகளிடம் முக ஸ்டாலின் கருத்துக்களை கேட்டறிந்திருந்தார். ஆனால், பதவிக்காக அரசியலில் நல்ல அனுபவமிக்க பெண் ஒருவரின் உயிரை பறிக்கும் அளவிற்கு,தென்காசியில் திமுக கோஷ்டி மற்றும் உட்கட்சி பூசல் வெடித்திருப்பது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0

1 thought on “எம்எல்ஏ பூங்கோதையை தற்கொலைக்கு தூண்டிய திமுகவினர் : நிர்வாகிகளின் காலில் விழுந்தது ஏன்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Comments are closed.