தி.மு.க. பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி கூடுகிறது : பொதுச்செயலாளர் கனிமொழியா..? துரைமுருகனா..?
1 September 2020, 12:05 pmசென்னை : தி.மு.க.வின் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வதற்காக, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி கூடுகிறது.
திமுக பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானதை தொடர்ந்து, அப்பதவிக்கு புதிய பொதுச்செயலாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு எழுந்தது. இந்தப் பதவிக்கு மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து, அவர் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்தும் விலகினார். அதேவேளையில், கனிமொழியும் பொதுச்செயலாளர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க.வின் பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்வதற்காக, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9ம் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடக்கிறது.
சகோதரி கனிமொழியை ஓரங்கட்டுவதற்காக, தொடர்ந்து தனது மகன் உதயநிதியை கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலைப்படுத்தி வருகிறார். எனவே, திமுகவின் புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு ஏ.வ.வேலு, டி.ஆர்.பாலு, பொன்முடி உள்ளிட்டோர் போட்டியிடக் கூடலாம் என்று தெரிகிறது.
0
0