நிதியே இல்ல… ரூ.80 கோடில பேனா சின்னம் எதுக்கு? 15 மாதமாக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாத திமுக அரசு : இபிஎஸ் அடுக்கடுக்கான கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 August 2022, 2:41 pm
Edappadi pakanisamy - Updatenews360
Quick Share

திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதியின் மகள் திருமணத்திற்கு பங்கேற்பதற்காக இன்று காலை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் வருகை தந்தார்.
இதைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒயர்லெஸ் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி சிவபதி அண்ணாவி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரத்தினவேலு, பா குமார். நிர்வாகிகள் சீனிவாசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உரை : அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்துள்ளது. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுக.

தமிழ்நாடு வளம் பெற உதவி செய்தவர்கள் எம்.ஜி‌ஆர்‌, ஜெயலலிதா. திமுக ஆட்சி அமைந்து 15 மாதம் ஆகிறது. திருச்சிக்கு ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை.ஏன் தமிழகத்திற்க்கு கூட கொண்டு வரவில்லை.

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் கட் செய்து திறந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்க்குத்தான் ஸ்டிக்கர் ஒட்டிகிறார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வருகிறது. திமுக அரசின் மெத்தனப்போக்கால் திட்டங்கள் முடங்கியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் கதவணை உடைந்த உடன் ரூ.325 கோடி நிதி ஒதுக்கி அணை கொண்டு வந்தோம். அதை முடக்காமால் வேகமாக மக்களின் பயன்பாட்டுக் கொண்டு வாருங்கள்.

சத்திரம் பேருந்து நிலையம், நேப்பியர் பாலம் போல் உள்ள கொள்ளிடம் பாலம் உட்பட அதிமுக கொண்டு வந்தது. நிதியே இல்லை என்று அரசு கூறும் போது ரூ.80 கோடி செலவில் மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

Views: - 277

0

0