மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாளை ஒட்டி, சென்னை ராயபுரத்தில் கேக் வெட்டியும் ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கியும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த தலைவர்களில் புரட்சி தலைவர், புரட்சி தலைவி ஆகியோரது 2 தலைவர்களின் பிறந்த நாள் மட்டும் தான் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடி வருவதாக டி.ஜெயக்குமார் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ; சென்னையில் கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், சுகாதார துறையும் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். கொசுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அழிக்காமல், உற்பத்தி பெருகிவிட்ட இந்த சமயத்தில் அழிக்க நினைப்பது திமுக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு மக்கள் நலன்கள், தேவைகளை கேட்டு அறிந்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளது பற்றிய கருத்துக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் , 234 தொகுதிகளிலும் மக்களின் குறைகளை அமைச்சர்கள் கேட்பார்களா என்று கேள்வி எழுப்பினார்
தமிழகத்தில் இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தமிழக அரசு பெற்று இருப்பது அவசியம் என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமிழக அரசின் கடமை என்றார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு தற்போது மூன்று புள்ளி ஐந்து லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தவணை முறையில் அவர்களிடம் அதற்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம்
சென்னை மாநகரில் ஆயிரம் தனியார் பேருந்துகளை தனியார் மூலம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பது குறித்தும், முதற்கட்டமாக 500 பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்பட்டிருப்பது குறித்து கூறிய அவர், இது ஊழல் செய்வதற்கு வழிவகுக்கும் என்றார். ஆட்சிக்கு வருவதற்கு முன் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டு தற்போது போக்குவரத்து துறையை தனியாருக்கு விட்டுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும்
அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 3.5 லட்சம் வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு அளித்த நிலையில், தற்போதைய திமுக அரசு ஆண்டுக்கு எத்தனை இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கியுள்ளது என்றும் கேள்வி எழுப்பினர். அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் முறையாக தேர்வு நடத்தி பணி வாய்ப்பு வழங்க முடியாமல் திறானியற்று விடியா திமுக அரசு செயல்படுகிறது
மாண்டஸ் புயல் பாதித்து மூன்று மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
தற்போதைய ராயபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கக்கூடிய ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி கட்டியுள்ள 100 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கு அப்ரூவல் உள்ளதா என கேள்வி எழுப்பினார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.