அதிமுக மீதுள்ள பயத்தால் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற்றுள்ளது : ஜெயக்குமார் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 11:29 am
Admk Jayakumar - Updatenews360
Quick Share

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். வரும் காலங்களில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும்.

அதிமுகவை பொறுத்தவரை கட்சி எழுச்சியாகவே உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு பிற கட்சிகள் பயந்தன.

எந்த தேர்தலிலும் இதுபோல திமுக பயந்தது கிடையாது. திமுக 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து போலியான வெற்றியை பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்ததுள்ளது என்றார்.

Views: - 116

0

0