ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்… சென்னையில் நடந்த திடீர் சந்திப்பால் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
17 March 2023, 5:06 pm
Quick Share

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சந்தித்து பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றமும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பை அளித்தது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ..? என்று கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, டிடிவி தினகரனுடன் அமமுகவில் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தால், அதனை செய்வேன் என்றும், விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும் நேற்று இரவு கூறியிருந்தார்.

கடந்த மாதம் 2ம் தேதி தனது தாயார் பழனியம்மாள் நாச்சியார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததால், சடங்கு சம்பிரதாயங்களை செய்துவிட்டு, ஓபிஎஸ் தேனியில் இருந்து வந்தார். இந்த சூழலில், நேற்றிரவு சென்னைக்கு வந்தார்.

இந்த நிலையில், ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினர். சென்னை – கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினார். ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் மனோஜ் பாண்டியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் இருந்தனர்.

Views: - 69

0

0

Leave a Reply