அது ‘நெல் கொள்முதல் நிலையம்’ தலைவரே…! கிராம சபைக் கூட்டத்தில் வழக்கம் போல திணறிய ஸ்டாலின்..! (வீடியோ)

Author: Babu
2 October 2020, 4:05 pm
thiruvallur dmk 2 - updatenews360
Quick Share

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில், நெல் கொள்முதல் நிலையம் சொல்ல தமது பாணியில் உளறியதால், திமுக நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஜமின் கொரட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புது சத்திரம் பகுதியில் அரசு உத்தரவை மீறி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். கிராம சபைக் கூட்டம் என்பது சம்பந்தபட்ட கிராம மக்கள் கலந்து கொள்ளும் கூட்டம் என்பதை மறந்து, வெளியூர்களில் ஆட்களை அழைத்து வந்து கிராம சபைக் கூட்டத்தை கலந்து கொள்ள வைத்தனர்.

கிராம சபைக் கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம், ‘திட்டமிட்டே எங்களின் செய்திகளை ஒளிபரப்பவில்லை’, எனக் கடிந்த படி கூட்டத்தை தொடங்கினார்.

அப்போது, கூட்டத்தில் வேளாண் திருத்த மசோதா சட்டத்தை பற்றி பேசுகையில், “நெல் கொள்முதல் நிலையம் என்று கூறுவதற்கு தெரியாமல், தமது பாணியில் உளர ஆரம்பித்தார். இது அங்கு அமர்ந்திருந்த வெளியூர் கிராம மக்களுக்கு நகைச்சுவையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதனால், கிராம சபைக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அரசின் தடையை மீறி நடத்தப்படும் இந்த கிராம சபைக் கூட்டத்தை வலுவானதாக தலைவர் மாற்றுவார் என்று எண்ணியிருந்த திமுக நிர்வாகிகளை, தனது உளரல் பேச்சால் ஏமாற்றம் அடையச் செய்தார்.

மேலும், கூட்டம் முடிந்ததும் அங்கிருந்த பெண்கள் கொரோனவையும் மறந்து தின்பண்டத்துக்கு ஒருவர் மீது ஒருவர் விழுந்து முண்டியடித்துக்கொண்டு வாங்கி சென்றனர். இதனால், அப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டது.

Views: - 57

0

0