சென்னையை மிரட்டும் கொரோனா : தனி விமானத்தில் குடும்பத்துடன் பறந்த ஸ்டாலின்… மலை பிரேதசத்திற்கு செல்ல திட்டம்..?

16 April 2021, 1:30 pm
MK-Stalin-with-son- updatenews360
Quick Share

சென்னையில் கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாகி வரும் நிலையில், அம்மாவட்டத்தை விட்டு திமுக தலைவர் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் வெளியேறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சராசரி பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 8 ஆயிரத்தை நெருங்கி விட்டது. குறிப்பாக சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2,500க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

Corona_Vaccination_updateNews360

இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மறுபுறத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பொதுவாக தேர்தல் முடிந்த கையோடு சுற்றுலா செல்வது வழக்கம்.

stalin hair - updatenews360

அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத்துடன் 2 தனி விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் பேரக் குழந்தைகள் உள்பட 17 பேர் சென்றுள்ளனர். அங்கிருந்து கொடைக்கானலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், சென்னையில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால், கொஞ்ச காலம் சென்னைக்கு வெளியே இருக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Views: - 81

0

0