என்ன தயா இதெல்லாம்..? காலையிலேயே கடுப்பான ஸ்டாலின்..!

29 August 2020, 12:43 pm
https://www.updatenews360.com/other/dmk-leader-stalin-upset-over-dinakaran-magazine-290820/
Quick Share

பொதுவாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தங்களின் கொள்கைகளையும், கட்சியின் அன்றாட நிகழ்வுகளையும் விளம்பரம் செய்வதற்காகவே, ஆதரவு தொலைக்காட்சிகளையும், நாளிதழ்களையும் நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் இயங்கி வரும் நாளிதழ்களின் ஒன்றான தினகரன் பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. ஸ்டாலின் குடும்ப நிறுவனமும், திமுகவின் ஆதரவு நாளிதழுமான தினகரனில், எப்போதும் திமுகவின் ஆதரவு செய்திகளும், அதிமுகவின் எதிர்ப்பு செய்திகளை மட்டுமே போட வேண்டும் என்பதே, அதன் கொள்கையும், குறிக்கோளாகும். மீறி அதிமுகவை போற்றும் செய்திகள் இருப்பின், நாளிதழின் ஏதேனும் ஒரு மூளையில் துண்டு செய்தியாக இடம் பெற்றிருக்கும்.

அந்த அளவிற்கு தினகரன் நாளிதழை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் ஸ்டாலின். அதிமுகவினரை தாக்கி வெளியிடப்படும் செய்திகளை கண்டுதான், திமுக தலைவர் ஸ்டாலினின் ஒவ்வொரு விடியலும் இருக்கும். அப்படியிருக்க, ‘என்ன தயா இதெல்லாம்..?’ என்று ஸ்டாலின் சொல்லும் அளவிற்கு தினகரனின் இன்றைய ஒரு பக்கம் உள்ளது.

அண்மையில், அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், எங்களது குடும்பத்தினரின் ஓட்டும் உங்களுக்கே என்று கூறி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் இளைஞர்களின் ஆதரவை கண்டு திமுக உள்ளிட்ட எதிர் கட்சியினருக்கு புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

dinakaran2 - updagtenews360

இந்த நிலையில், தினகரனின் ஒரு பக்கத்தில் மாணவர்களால் சித்தரிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாணவர்கள் முன்னேற்ற அமைப்பினர் கொடுத்த இந்த விளம்பரத்தில், ‘மாணவர்களின் மனித கடவுளே…..எங்கள் ஓட்டு உங்களுக்கே’ போன்ற வசனங்கள் இடம்பெற்றிருப்பது ஸ்டாலினுக்கு தயாநிதி மாறன் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணத்திற்காக கொள்கையை கூட மறந்து விடுவதா..? என்று தயாநிதி மாறனிடம் நேரடியாக கேட்க முடியாமல், ஸ்டாலின் தவித்து வருகிறார்.

ஸ்டாலினின் கண்டிப்பினால் திமுக விளம்பரங்களை மட்டுமே போட்டு வருவதற்கு உரிய நிதியும் கிடைப்பதில்லை, எனவே, நிதி நெருக்கடியை சமாளிக்க இது போன்ற விளம்பரங்களை தலைமையை மீறி போட வேண்டி இருப்பதாக கழக உடன்பிறப்புகளே முட்டு கொடுத்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, தினகரனின் இந்த பக்கத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். எனவே, ஸ்டாலின் இன்று சமூக வலைதளங்களுக்கு லீவு கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்த அளவிற்கு உள்ளே புகைந்து கொண்டிருக்கும்…

Views: - 50

0

0