‘எடப்பாடியாரின் ஆட்சி சிறப்பாக உள்ளது’ புகழ்ந்து தள்ளிய திமுக எம்எல்ஏ.. புகைச்சலில் முக ஸ்டாலின்..!!

2 November 2020, 1:27 pm
stalin upset - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை திமுக எம்எல்ஏ புகழ்ந்து பேசியிருப்பது, திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்குட்பட்ட ஒதலவாடியில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை திமுக எம்எல்ஏ கே.வி. சேகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய், கண் மற்றும் பல் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ கேவி சேகரன் பேசுகையில், “முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஒரு ஞானி, கருணாநிதியும் மக்களுக்கான கருத்தை எழுதியுள்ளார். அதிமுக அரசின் நல்ல திட்டங்களை வரவேற்போம். தற்போதைய அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக அதிமுக அரசு செய்யும் அனைத்து திட்டங்களையும் வரவேற்போம்,” எனக் கூறினார்.

பொதுமக்கள் கூடியிருக்கும் நிகழ்ச்சியில், தேர்தல் சமயத்தில் திமுக எம்எல்ஏ ஒருவர் அதிமுக அரசைப் பாராட்டி பேசியது அக்கட்சியின் தலைவர் திமுக ஸ்டாலின் உள்பட மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Stalin_DMK_UpdateNews360

ஏற்கனவே, திமுக எம்எல்ஏக்கள் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவி வரும் நிலையில், மேலும் ஒரு எம்எல்ஏ இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது அக்கட்சியினருக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர் கைகாட்டுபவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து வருவது திமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 62

0

0

1 thought on “‘எடப்பாடியாரின் ஆட்சி சிறப்பாக உள்ளது’ புகழ்ந்து தள்ளிய திமுக எம்எல்ஏ.. புகைச்சலில் முக ஸ்டாலின்..!!

Comments are closed.