வெள்ள பாதிப்பு பற்றி அரசை விமர்சித்த பிரபல பத்திரிகையாளருக்கு திமுகவினர் கொலை மிரட்டல்.. CM நடவடிக்கை எடுக்க பாஜக டிமாண்ட்!!
கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மிக்ஜாம் புயலால் கனமழை பெய்தது.இதனால் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெருமளவு பாதித்துள்ளது.
மழை அளவு வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மழையால் 4 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. 18 பேர் வரை உயிரிழந்ததுள்ளனர்.
கனமழையால் வீடுகளுக்கு தண்ணீர் புகுந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. இதையடுத்து அரசு மற்றும் தன்னார்வல்ர்கள், பேரிடர் மீட்பு குழுவால் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் பல இடங்களில் ஒருவாரமாக வெள்ளநீர் வற்றாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே காரணம் என கூறப்படுகிறது
மேலும் வடிகால் பணிக்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யதாக சொல்லப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் ஆட்சி அவலங்களை பிரபல பத்திரிகையாளர் ஷபீர் அகமது விமர்சித்துள்ளார். இதனால் அவருக்கு திமுகவினரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது X தளப் பக்கத்தில்,
‘எதை கொண்டு அடிப்பது? பரதேசிப்பயலே, உன்னையெல்லாம் நிம்மதியா வாழவே விடக்கூடாது பரதேசி நாயே, புறம்போக்கு பயலே’ என்று சென்னை வெள்ள பாதிப்பு குறித்து அரசை விமர்சித்த பிரபல ஊடகவியலாளரை தரக் குறைவாக விமர்சித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மகன் சாய் லட்சுமிகாந்த் பாரதி உள்ளிட்ட திமுகவினர் அரசின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதா? அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்தினால் வாழவே விடக்கூடாது என்று சொல்வதா?
மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை ஒருமையில் ‘அந்த பொம்பளை’ என்று விமர்சித்துள்ளது பெண் இனத்தையே கேவலப்படுத்தும், அவமானப்படுத்தும் செயல்.
இந்த ‘ட்விட்டர் ஸ்பேஸ்’ தளத்தில் பேசிய அனைவரின் மீதும் தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்குமான முதல்வர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பத்திரிகை சுதந்திரத்தை, கருத்து சுதந்திரத்தை சற்றும் மதிப்பாரேயானால், இந்த உரையாடலில் ஈடுபட்டவர்களை தி.மு.க விலிருந்து நீக்க வேண்டும். சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்.
அந்த பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பதி விட்டுள்ளார்
உள்ளதை உள்ளபடி சொல்லும் பத்திரிகையாள்ர்களுக்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.