பாஜகவில் இணைந்தார் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம்..!

3 March 2021, 9:23 pm
ku_ka_selvam_Updatenews360
Quick Share

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்வாக உள்ள கு.க.செல்வம் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். கடந்த ஆண்டில் திமுக தலைமையுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து, டெல்லி சென்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். ஆனால் கட்சி மாறவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த திமுக தலைமை, கு.க.செல்வத்தை திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்குவதாக அறிவித்தது. ஆனாலும் சட்டமன்றத்தில் திமுக எம்எல்ஏவாகவே நீடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்சித் தாவல் சட்டத்தின்படி பதவி பறிபோகலாம் என்பதால் கு.க.செல்வம் பாஜகவில் இணையாமலேயே இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பாஜகவில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார்.

பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று மாநில பாஜக தலைவர் எல்.முருகன், மேலிட பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் தன்னை அதிகாரப்பூர்வமாக இன்று பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

Views: - 32

0

0