வாயால் வம்பில் சிக்கிக் கொண்ட திமுக எம்எல்ஏ… ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..!! இது எல்லாம் தேவையா..?

11 November 2020, 8:21 pm
DMK MLA - updatenews360
Quick Share

சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் அத்துமீறி நடந்து கொண்ட திமுக எம்எல்ஏவை பொதுமக்கள் முற்றுகையிட்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்தால், போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து அவர் வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லல் ஒன்றியம் சின்ன குன்றக்குடியில் புதிய ரேஷன் கடையை திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிமுக செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் மற்றும் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர்களின் உதவியுடன், அமைச்சர் ஜி பாஸ்கரன் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சின்ன குன்றக்குடியில் புதிய ரேஷன் கடை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, ரேஷன் கடை கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளார், மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரும், திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏவுமான பெரிய கருப்பன், நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும், அறையை விட்டு அவர்களை வெளியே போகுமாறு மிரட்டி, தகராறில் ஈடுபட்டார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உடனே, திமுக எம்எல்ஏ பெரிய கருப்பனை முற்றுகையிட்ட மக்கள், அவருக்கு எதிராக கூச்சலிட்டு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சுதாரித்துக் கொண்ட அவர், போலீசாரின் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினார். பின்னர், மீண்டும் ரேஷன் கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசி நிகழ்ச்சியில் சலசலப்பை ஏற்படுத்துவதற்காகவும், இரு கட்சியினரிடையே பிரச்சனையை தூண்டும் நோக்கில்தான் திமுக எம்எல்ஏ இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். எம்எல்ஏ பெரிய கருப்பனின் இந்த செயல் திமுக நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 31

0

0

1 thought on “வாயால் வம்பில் சிக்கிக் கொண்ட திமுக எம்எல்ஏ… ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..!! இது எல்லாம் தேவையா..?

Comments are closed.