என்னது, ஒரு எம்.எல்.ஏ. தாவலா…! அலறியடித்துக் கொண்டு அறிவாலயம் விரைந்த ஸ்டாலின்..!

4 August 2020, 3:56 pm
AnnaArivalayam
Quick Share

சென்னை : தி.மு.க. எம்.எல்.ஏ., கு.க. செல்வன் பா.ஜ.க.வில் இணைய இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக தி.மு.க.வில் உள்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதியின் ஆதரவாளர்களுக்கே, கட்சியின் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி, தி.மு.க.வின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக உதயநிதியின் ஆதரவாளரான சிற்றரசு நியமிக்கப்பட்டிருப்பதால், அதிருப்தியடைந்த தி.மு.க., எம்.எல்.ஏ. கு.க. செல்வம், இன்று மாலை பா.ஜ.க.வில் இணைய உள்ளார்.

இதனை துளியும் எதிர்பார்க்காத தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மிகவும் பதறி போயுள்ளார். எம்.எல்.ஏ. தாவல் குறித்து அவசர அவசரமாக ஆலோசனை நடத்த உடனடியாக அண்ணா அறிவாலயத்திற்கு விரைந்தார். அங்கு மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்பட அனைவரையும் வரவழைத்துள்ளார். எம்.எல்.ஏ. திடீரென கட்சியை மாற்று கட்சிக்கு செல்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்த போது, மாற்றுக் கட்சியினரை தங்களது கட்சிக்கு இழுப்பது என்ற விஷயமே இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது நியமிக்கப்பட்டுள்ள எல். முருகன், மற்ற கட்சியில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை குறி வைத்து இழுத்து வருகிறார். இதனை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்தாலும், பா.ஜ.க.வினர் வரவேற்காமலா..! இருக்கப் போகிறார்கள். பார்ப்போம், இன்னும் எத்தனை எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பா.ஜ.க.விற்கு தாவுகிறார்கள் என்பதை…!

Views: - 6

0

0