சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை திமுகவினர் கொண்டு சென்ற வழக்கு : டிச.,2ம் தேதி இறுதி விசாரணை

9 November 2020, 7:21 pm
dmk gutka - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் டிசம்பர் 2ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட 21 எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து திமுகவினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், சபாநாயகர் அளித்த நோட்டீஸில் பிழை இருப்பதாகவும், வேண்டுமென்றால் மீண்டும் நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

அதன்படி, மறைந்த மற்றும் கட்சியில் இருந்து விலகி எம்எல்ஏக்களை தவிர்த்து முக ஸ்டாலின் உள்பட 18 எம்எல்ஏக்களுக்கு 2வது முறையாக சபாநாயகர் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து மீண்டும் திமுக எம்எல்ஏக்கள் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உரிமைக் குழுவின் 2-வது நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து குட்கா விவகாரத்தில் உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸூக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக்கோரி பேரவை செயலாளர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நவ.,9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்த வழக்குகளில் டிச.,2ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கு.க. செல்வத்திற்கு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

Views: - 22

0

0

1 thought on “சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை திமுகவினர் கொண்டு சென்ற வழக்கு : டிச.,2ம் தேதி இறுதி விசாரணை

Comments are closed.