அதிமுகவில் இணைய 10 திமுக எம்எல்ஏக்கள் தயார்..? கார்ப்பரேட் மாடல்தான் திராவிட மாடல்… இபிஎஸ் பரபரப்பு தகவல்..!!

Author: Babu Lakshmanan
7 September 2022, 2:21 pm
Quick Share

10 திமுக எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு தாவுவதற்கு தயாராக இருப்பதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- பாசமுள்ள கட்சி அதிமுக அன்போடு அழைத்ததால் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தொண்டராக கலந்து கொண்டேன். திமுக எம்எல்ஏக்கள் தன்னிடம் பேசி வருகின்றனர். 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னோடு பேசி வருகின்றனர்.

ராகுல் காந்தி அவருடைய கட்சியை வளர்ப்பதற்காக நடை பயணம் செய்கிறார். திராவிட முன்னேற்ற கழகம் குடும்பக் கட்சி, கார்ப்பரேட் மாடல். இதுதான் திராவிட மாடல். சட்டமன்ற உறுப்பினர் மட்டுமேயான உதயநிதி ஸ்டாலின், வேறு எந்த பதவியிலும் இல்லாத நிலையில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் வருமா வராதா என்பதை வரும்போது பார்க்கலாம். தொண்டர்கள் மட்டும்தான் அதிமுக. மற்றவர்களுக்கு இடம் இல்லை. தொண்டர் என்ற முறையில் தான் இங்கு வந்துள்ளேன். அதிமுக அலுவலகத்தில் திருடு போன சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி விசாரணை காலம் தாழ்ந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதற்குரிய நடவடிக்கை எடுக்கின்ற முதலமைச்சரும் தமிழகத்தில் கிடையாது. நீதிமன்றத்திற்கு சென்ற பின்பு தான், அதிமுக அலுவலக வழக்கு குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொள்கின்றனர். காவல்துறையினரின் மெத்தன போக்கு காரணமாக சிபிசிஐடி விசாரணை வந்துள்ளது.

திமுக அரசு சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு சான்று. அதிமுக அலுவலகத்தில் திருடு போனது குறித்து புகார் அளித்தும் விசாரணை முறையாக நடைபெறவில்லை. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளாததால் நாங்கள் தனியாக இருக்கிறோம்.

பசியும் பட்டினியுமாக உள்ள ஏழைகளுக்காக அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டது. அதனை மூடியவர்களுக்கு அடுத்த தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். கொசஸ்த்தலை ஆற்றில் ஆந்திரா அரசு தடுப்பணை கட்டுவது கண்டிக்கத்தக்கது. விவசாயிகள் பாதிக்கக் கூடாது, குடிநீர் பாதிக்க கூடாது, அணை கட்டுவதை அரசு தடுக்க வேண்டும்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை பாரதப் பிரதமருக்கு எடுத்துச் சொல்லி கைது செய்யப்பட்டவர்களை அதிமுக அரசு மீட்டு வந்தது. படகுகளை மீட்டு கொண்டு வந்தது, எனக் கூறினார்.

Views: - 372

0

0