கோவை ; நெடுஞ்சாலையில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, விபத்தில் சிக்கிய வாலிபரை மீட்டு தனது வாகனத்தில் அழைத்து சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா, தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, அவிநாசியில் இருந்து விமான நிலையம் வந்து கொண்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவுடன், திமுக மருத்துவரணி மாநில நிர்வாகி கோகுல், கிருபா சங்கர் உள்ளிட்டவர்கள் பயணித்தனர். அப்போது, கனியூர் சுங்கசாவடி அடுத்த நீலம்பூர் மேம்பாலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா காரில் பயணித்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் விபத்து ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்தவரை பார்த்தார்.
உடனடியாக நெடுஞ்சாலை ஓரம் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று பார்த்த ஆ. ராசா, காலம் தாழ்த்தாமல் படுகாயமடைந்த வாலிபரை தூக்கி தனது காரில் அவசர சிகிச்சைக்காக அந்த கோவை ராயல்கேர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மயக்கமுற்ற அந்த இளைஞரை உடன் இருந்து சிறப்பு சிகிச்சையளிக்க, தன்னுடன் பயணித்த மருத்துவர் கோகுல் அவர்களையும் அனுப்பி வைத்தார்.
இளைஞருக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை குறித்து மருத்துவமனைக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். தனியார் நிறுவன ஊழியரான தமிழ் செல்வன் நெடுஞ்சாலையில் பயணித்திருக்கின்றார். லாரி ஒன்றின் மீது எதிர்பாராத விதமாக வாலிபர் மோதியதனால் இந்த சாலை விபத்து ஏற்பட்டது தெரியவந்தன. கழுத்தில், கைகளில் காயமடைந்த வாலிபருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை தந்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.