மாறன் பிரதர்ஸை கிழித்தெடுத்த திமுக எம்பி : ஒரேயொரு விளம்பரத்தால் சன் டிவியை எதிர்க்கும் உ.பி.க்கள்..!!

31 December 2020, 4:37 pm
dmk - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. பட்டி தொட்டியெங்கும் போஸ்டர்கள், கட் அவுட்கள், மூளை முடுக்குகளில் எல்லாம் துண்டு நோட்டிசுகளில் அரசியல் கட்சிகளின் சாதனைகளையும், வேதனைகளையும் பட்டியலிட்டு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல், நவீன காலத்திற்கு ஏற்ப சமூக வலைதளங்களில், ஊடகங்களிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அப்படி, வெளியிடப்பட்ட விளம்பரத்தினால், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவி.

kalanithi-maran-and-dayanidhi-maran -updatenews360

இந்த டிவி திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கு சொந்தமானது. முக ஸ்டாலினின் உறவுக்காரரும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமாக தயாநிதி மாறன் இருந்து வரும் நிலையில், “நல்ல ஆளுமையில் NO.1 மாநிலம்” என்னும் வாசகங்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்துடன் கூடிய அதிமுகவின் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. இது திமுக அடிமட்ட தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல், மூத்த தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சன் டிவியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தயாநிதி மற்றும் கலாநிதி இருவரும் ஸ்டாலினின் நெருங்கிய உறவுக்காரர் என்பதால், அவரை எதிர்த்து கேள்வி எழுப்பினால், ‘வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் எடுத்து விட்டக் கதை’ போல் ஆகிவிடும் என நினைத்து திமுக தலைவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.

இருப்பினும், பொறுமை இழந்த தர்மபுரியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார், மாறன் சகோதரர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- ‘சேற்றில்/ஆற்றில் கால். சன் டிவி பெரிய வணிக சாம்ராஜ்யமாக இருக்கலாம். ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை. அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள்.

எங்களுக்கு தொழில் தான் முதல். அது தான் முக்கியம். திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது. திமுக விடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை, என்று வெளிப்பயடையாக அவர்கள் அறிவித்துவிட்டு இது போல் விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பட்டும்,’ எனக் கடுமையாகக் கூறியுள்ளார்.

எம்பியின் இந்த பதிவுக்கு பதிலளித்த பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, “சிறப்பு. இதே ரீதியிலான அறிவுரையை ஹிந்தியை கற்பிக்கும் சன் ஷைன் பள்ளிக்கும் சொல்வீர்களா? ஆனால் கல்வியை வியாபாரம் என்று உங்களின் அதிகார பூர்வ செய்தி தொடர்பாளர்கள் கூறுகிறார்கள். வியாபாரத்தை நீங்கள் கண்டிக்கிறீர்கள். முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தயாநிதி மாறனுக்கு ஸ்டாலினின் வெற்றியை விட, பணம் மட்டும்தான் முக்கியம் என திமுகவினர் கடுமையாக தங்களின் ஆதங்கங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றன.

எது எப்படியோ, விளம்பரக் காசு வந்தா சரி… ( தயாநிதி மைன்ட் வாய்ஸ்)!!!

Views: - 32

0

0